Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

செய்ந்நன்றி அறிதல்

Gratitude

அறத்துப்பால் · VirtueKural 110 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 110

Tamil original

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

Read the sounds · Transliteration

Ennandri Kondraarkkum Uyvuntaam Uyvillai
Seynnandri Kondra Makarku

Understand the idea · English meaning

He who has killed every virtue may yet escape; there is no escape for him who has killed a benefit.

Connect it to life today · Modern meaning

People can recover from almost any wrongdoing eventually, but forgetting someone who genuinely helped you is a kind of damage that's hard to undo, because it corrodes trust in a way little else does. For example, ghosting the mentor who once vouched for you when you needed a chance can cost you a relationship no apology fully repairs.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை

Kalaignar

கலைஞர் : எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை