Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

புணர்ச்சி மகிழ்தல்

Rejoicing in the Embrace

காமத்துப்பால் · LoveKural 1105 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1105

Tamil original

வேட் ட பொழுதின் அவையவை போலுமே

தோட் டார் கதுப்பினாள் தோள்.

Read the sounds · Transliteration

Vetta Pozhudhin Avaiyavai Polume
Thottaar Kadhuppinaal Thol

Understand the idea · English meaning

The shoulders of her whose locks are adorned with flowers delight me as if they were the very sweets I have desired (to get).

Connect it to life today · Modern meaning

Being with the person you desire can bring the joy of receiving exactly what you hoped for. After waiting all week to see someone special, their simple hug can feel like the reward you had been longing for.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : மலரணிந்த கூந்தலை உடைய இவளுடைய தோள்கள் விருப்பமான பொருள்களை நினைத்து விரும்பிய பொழுது அவ்வப் பொருள்களைப் போலவே இன்பம் செய்கின்றன.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நாம் விரும்பும் பொருள்கள் விரும்பியபொழுது விரும்பியவாறே இன்பம் தருவது போல, பூச்சூடிய கூந்தலை உடைய இவள் தோள்கள் இவளுடன் எப்போது கூடினாலும் இன்பம் தருகின்றன.

Kalaignar

கலைஞர் : விருப்பமான பொருள் ஒன்று, விரும்பிய பொழுதெல்லாம் வந்து இன்பம் வழங்கினால் எப்படியிருக்குமோ அதைப் போலவே பூ முடித்த பூவையின் தோள்கள் இன்பம் வழங்குகின்றன