Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

புணர்ச்சி மகிழ்தல்

Rejoicing in the Embrace

காமத்துப்பால் · LoveKural 1110 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1110

Tamil original

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்

செறிதோறும் சேயிழை மாட்டு.

Read the sounds · Transliteration

Aridhoru Ariyaamai Kantatraal Kaamam
Seridhorum Seyizhai Maattu

Understand the idea · English meaning

As (one’s) ignorance is discovered the more one learns, so does repeated intercourse with a well-adorned female (only create a desire for more).

Connect it to life today · Modern meaning

The more deeply we know someone we love, the more we discover about our feelings, just as learning reveals how much we do not yet know. Each shared conversation can make affection feel fresh instead of ordinary.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : செந்நிற அணிகலன்களை அணிந்த இவளிடம் பொருந்துந்தோறும் காதல் உணர்தல்,நூற் பொருள்களை அறிய அறிய அறியாதமைக் கண்டாற் போன்றது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நூல்களாலும் நுண் அறிவாலும் அறிய அறிய முன்னைய நம் அறியாமை தெரிவதுபோல, நல்ல அணிகளை அணிந்திருக்கும் என் மனைவியுடன் கூடக் கூட அவள் மீது உள்ள என் காதற்சுவையும் புதிது புதிதாகத் தெரிகிறது.

Kalaignar

கலைஞர் : மாம்பழ மேனியில் அழகிய அணிகலன்கள் பூண்ட மங்கையிடம் இன்பம் நுகரும் போதெல்லாம் ஏற்படும் காதலானது, இதுவரை அறியாதவற்றைப் புதிதுபுதிதாக அறிவதுபோல் இருக்கிறது