Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

நாணுத் துறவுரைத்தல்

The Abandonment of Reserve

காமத்துப்பால் · LoveKural 1137 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1137

Tamil original

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்

பெண்ணின் பெருந்தக்க தில்.

Read the sounds · Transliteration

Katalanna Kaamam Uzhandhum Mataleraap
Pennin Perundhakka Thil

Understand the idea · English meaning

There is nothing so noble as the womanly nature that would not ride the palmyra horse, though plunged a sea of lust.

Connect it to life today · Modern meaning

The woman who endures even a sea of longing without making a public spectacle of it is praised as especially noble. The verse values her patience and restraint when private love brings intense pain.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : கடல் போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தை பொருத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பை போல் பெருமை உடைய பிறவி இல்லை.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : அதுதான் அவள் பெருமை; கடல் போலக் கரையில்லாத காதல் நோயை அவளும் அனுபவித்தாலும் மடல் ஊராது பொறுத்திருக்கும் பெண் பிறவியைப் போலப் பெருமையான பிறவி இவ்வுலகத்தில் வேறு இல்லை.

Kalaignar

கலைஞர் : கொந்தளிக்கும் கடலாகக் காதல் நோய் துன்புறுத்தினாலும்கூடப் பொறுத்துக்கொண்டு, மடலேறாமல் இருக்கும் பெண்ணின் பெருமைக்கு நிகரில்லை