Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

நாணுத் துறவுரைத்தல்

The Abandonment of Reserve

காமத்துப்பால் · LoveKural 1138 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1138

Tamil original

நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்

மறையிறந்து மன்று படும்.

Read the sounds · Transliteration

Niraiyariyar Manaliyar Ennaadhu Kaamam
Maraiyirandhu Mandru Patum

Understand the idea · English meaning

Even the Lust (of women) transgresses its secrecy and appears in public, forgetting that they are too chaste and liberal (to be overcome by it).

Connect it to life today · Modern meaning

Love can break out of secrecy and become public before the lovers are ready, without caring how modest or private they are. A hidden relationship may become school or neighborhood gossip after one revealing glance.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : இவள் மன அடக்கம் மிக்கவள்; பெரிதும் இரக்கப்பட வேண்டியவள் என்று எண்ணாமல் இந்த காதல் எங்களுக்குள் இருக்கும் இரகசியத்தைக் கடந்து ஊருக்குள்ளேயும் தெரியப்போகிறது.

Kalaignar

கலைஞர் : பாவம்; இவர், மனத்தில் உள்ளதை ஒளிக்கத் தெரியாதவர்; பரிதாபத்திற்குரியவர்; என்றெல்லாம் பார்க்காமல், ஊர் அறிய வெளிப்பட்டு விடக்கூடியது காதல்