Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

அலர் அறிவுறுத்தல்

The Announcement of the Rumour

காமத்துப்பால் · LoveKural 1142 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1142

Tamil original

மலரன்ன கண்ணாள் அருமை அறியாது

அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.

Read the sounds · Transliteration

Malaranna Kannaal Arumai Ariyaadhu
Alaremakku Eendhadhiv Voor

Understand the idea · English meaning

Not knowing the value of her whose eyes are like flowers this town has got up a rumour about me.

Connect it to life today · Modern meaning

The town does not understand the beloved's worth, yet its gossip accidentally helps the lovers by bringing their relationship into the open. A rumor meant as criticism can sometimes push families to acknowledge what was already true.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : மலர் போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : மலர் போன்ற கண்களை உடையவளை நான் சந்திக்க வாய்ப்பு இல்லாததைத் தெரிந்து கொள்ளாமல் இந்த ஊர் எங்கள் காதலைப் பேசியே எங்களுக்கு நன்மை செய்துவிட்டது.

Kalaignar

கலைஞர் : அந்த மலர்விழியாளின் மாண்பினை உணராமல் எம்மிடையே காதல் என்று இவ்வூரார் பழித்துரைத்தது மறைமுக உதவியாகவே எமக்கு அமைந்தது