Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

பிரிவாற்றாமை

Separation unendurable

காமத்துப்பால் · LoveKural 1152 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1152

Tamil original

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்

புன்கண் உடைத்தால் புணர்வு.

Read the sounds · Transliteration

Inkan Utaiththavar Paarval Pirivanjum
Punkan Utaiththaal Punarvu

Understand the idea · English meaning

His very look was once pleasing; but (now) even intercourse is painful through fear of separation.

Connect it to life today · Modern meaning

His look once made me happy, but now even being close to him hurts because I am already afraid of losing him. When someone you love is preparing to leave, a happy moment can be shadowed by worry.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அவருடைய பார்வை முன்பு இன்பம் உடையதாக இருந்தது, இப்போது அவருடைய கூட்டம் பிரிவுக்கு அஞ்சுகின்ற துன்பம் உடையதாக இருக்கின்றது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : அவர் பார்வை எனக்கு மகிழ்ச்சிதான். அவர் செயலோ பிரியப் போகிறார் என்ற அச்சத்தைத் தந்து கொண்டிருக்கிறதே!

Kalaignar

கலைஞர் : முன்பெல்லாம் அவரைக் கண்களால் தழுவிக் கொண்டதே இன்பமாக இருந்தது; ஆனால், இப்போது உடல் தழுவிக் களிக்கும் போதுகூடப் பிரிவை எண்ணும் அச்சத்தால் துன்பமல்லவா வருத்துகிறது!