கண்விதுப்பழிதல்
Eyes consumed with Grief
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Uzhandhuzhan Thulneer Aruka Vizhaindhizhaindhu
Venti Avarkkanta Kan
Understand the idea · English meaning
The eyes that became tender and gazed intently on him, may they sufer so much as to dry up the fountain of their tears.
Connect it to life today · Modern meaning
May the eyes that once gazed at him with eager affection suffer until their tears run dry. The eyes that kept looking for an absent lover through the night seem to punish themselves.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : அன்று விரும்பி நெகிழ்ந்து காதலரைக் கண்ட கண்கள் இன்று உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருந்திக் கண்ணீரும் அற்றுப் போகட்டும்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : விரும்பி மகிழ்ந்து விடாமல் அன்று அவரைக் கண்ட கண்களின் உள் இருக்கும் கண்ணீர் எல்லாம் இன்று வருந்தி வருந்தி வற்றிப் போகட்டும்!
Kalaignar
கலைஞர் : அன்று, இழைந்து குழைந்து ஆசையுடன் அவரைக் கண்ட கண்களே! இன்று பிரிந்து சென்றுள்ள அவரை நினைத்துக் தூங்காமலும், துளிக் கண்ணீரும் அற்றுப்போகும் நிலையிலும் துன்பப்படுங்கள்