Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

பசப்புறு பருவரல்

The Pallid Hue

காமத்துப்பால் · LoveKural 1183 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1183

Tamil original

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா

நோயும் பசலையும் தந்து.

Read the sounds · Transliteration

Saayalum Naanum Avarkontaar Kaimmaaraa
Noyum Pasalaiyum Thandhu

Understand the idea · English meaning

He has taken (away) my beauty and modesty, and given me instead disease and sallowness.

Connect it to life today · Modern meaning

He took my beauty and shyness and left me love-sickness and pallor in return. After someone leaves, the sadness can change how you look and how freely you carry yourself.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : காம நோயையும் பசலை நிறத்தையும் எனக்குக் கைம்மாறாக ‌‌கொடுத்து விட்டு, என் சாயலையும் நாணத்தையும் அவர் என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : அவர் என்னைப் பிரிகிறபோதே உள்ளத் துன்பத்தையும் பசலையையும் எனக்குக் கொடுத்துவிட்டு அவற்றுக்கு ஈடாக என் அழகையும் வெட்கத்தையம் கொண்டு போய்விட்டார்.

Kalaignar

கலைஞர் : காதல் நோயையும், பசலை நிறத்தையும் கைம்மாறாகக் கொடுத்து விட்டு அவர் என் அழகையும், நாணத்தையும் எடுத்துக் கொண்டு பிரிந்து சென்று விட்டார்