Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

பசப்புறு பருவரல்

The Pallid Hue

காமத்துப்பால் · LoveKural 1184 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1184

Tamil original

உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்

கள்ளம் பிறவோ பசப்பு.

Read the sounds · Transliteration

Ulluvan Manyaan Uraippadhu Avardhiramaal
Kallam Piravo Pasappu

Understand the idea · English meaning

I think (of him); and what I speak about is but his excellence; still is there sallowness; and this is deceitful.

Connect it to life today · Modern meaning

I think of him and speak only of his good qualities, yet this pallor has appeared anyway. Even when you remember someone fondly and say nothing bitter, missing them can still show on your face.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : யான் அவருடைய நல்லியல்புகளை நினைக்கின்றேன்; யான் உரைப்பதும் அவற்றையே; அவ்வாறிருந்தும் பசலை வந்தது வஞ்சனையோ? வேறு வகையோ?

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நான் நினைப்பதெல்லாம் அவரைத்தான். சொல்வது எல்லாம் அவர் குணங்களைத்தாம்; இருந்தும் இந்தப் பசலை வந்துவிட்டதே; இது வஞ்சகம் அல்லவா?

Kalaignar

கலைஞர் : யான் நினைப்பதும், உரைப்பதும் அவரது நேர்மைத் திறன் பற்றியதாகவே இருக்கும்போது, என்னையறியாமலோ வேறு வழியிலோ இப்பசலை நிறம் வந்தது எப்படி?