Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

கனவுநிலை உரைத்தல்

The Visions of the Night

காமத்துப்பால் · LoveKural 1218 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1218

Tamil original

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்

நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.

Read the sounds · Transliteration

Thunjungaal Tholmelar Aaki Vizhikkungaal
Nenjaththar Aavar Viraindhu

Understand the idea · English meaning

When I am asleep he rests on my shoulders, (but) when I awake he hastens into my soul.

Connect it to life today · Modern meaning

In sleep he seems to rest on her shoulder, and when she wakes he quickly settles in her heart. After a vivid dream about someone you love, their presence can stay with you through the morning.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தூங்கும்போது கனவில் வந்து என் தோள்மேல் உள்ளவராகி, விழி்த்தெழும்போது விரைந்து என் நெஞ்சில் உள்ளவராகிறார்‌.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : என் நெஞ்சில் எப்போதும் வாழும் என்னவர் நான் உறங்கும் போது என் தோளின் மேல் கிடக்கிறார். விழித்துக் கொள்ளும் போதோ வேகமாக என் நெஞ்சிற்குள் நுழைந்து கொள்கிறார்.

Kalaignar

கலைஞர் : தூக்கத்தில் கனவில் வந்து என் தோள் மீது சாய்ந்து இன்பம் தந்தவர், விழித்தபோது எங்கும் போய் விடவில்லை; என் நெஞ்சில் தாவி அமர்ந்து கொண்டார்