பொழுதுகண்டு இரங்கல்
Lamentations at Eventide
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Maalaiyo Allai Manandhaar Uyirunnum
Velainee Vaazhi Pozhudhu
Understand the idea · English meaning
Live, O you evening are you (the former) evening? No, you are the season that slays (married) women.
Connect it to life today · Modern meaning
Evening is no longer a peaceful time; after her beloved’s departure, it feels like it destroys her. The hour that once marked the end of a good day can become the hardest time when someone is alone.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கினறாய்!
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : பொழுதே! நீ வாழ்க! முன்பெல்லாம் வருவாயே அந்த மாலையா நீ என்றால் இல்லை; திருமணம் செய்து கொண்ட பெண்களின் உயிரை வாங்கும் பொழுது நீ.
Kalaignar
கலைஞர் : நீ மாலைப் பொழுதாக இல்லாமல் காதலரைப் பிரிந்திருக்கும் மகளிர் உயிரைக் குடிக்கும் வேலாக இருப்பதற்காக உனக்கோர் வாழ்த்து!