Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

பொழுதுகண்டு இரங்கல்

Lamentations at Eventide

காமத்துப்பால் · LoveKural 1223 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1223

Tamil original

பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்

துன்பம் வளர வரும்.

Read the sounds · Transliteration

Paniarumpip Paidhalkol Maalai Thuniarumpith
Thunpam Valara Varum

Understand the idea · English meaning

The evening that (once) came in with trembling and dimness (now) brings me an aversion for life and increasing sorrow.

Connect it to life today · Modern meaning

Evening once arrived with only a little unease, but now it returns with sorrow that grows stronger and makes life feel unbearable. Each sunset can deepen the ache of someone waiting for a loved one who is far away.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பனி தோன்றிப் பசந்த நிறம் கொண்ட மாலைப் பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக வருகின்றது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : அவர் என்னைப் பிரிவதற்கு முன்பு என்முன் வரவே நடுக்கம் எய்தி மேனி கறுத்து வந்த இந்த மாலைப் பொழுது இப்போது எனக்குச் சாவு வரும்படி தோன்றி, அதற்கான துன்பம் பெருகும்படி நாளும் வருகின்றது.

Kalaignar

கலைஞர் : பக்கத்தில் என் காதலர் இருந்த போது பயந்து, பசலை நிறத்துடன் வந்த மாலைப் பொழுது, இப்போது என் உயிரை வெறுக்குமளவுக்குத் துன்பத்தை மிகுதியாகக் கொண்டு வருகிறது