பொழுதுகண்டு இரங்கல்
Lamentations at Eventide
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Azhalpolum Maalaikkuth Thoodhaaki Aayan
Kuzhalpolum Kollum Patai
Understand the idea · English meaning
The shepherd’s flute now sounds as a fiery forerunner of night, and is become a weapon that slays (me).
Connect it to life today · Modern meaning
The shepherd’s flute once sounded pleasant, but now it announces the painful evening and feels like a weapon. A song that used to make someone happy can become painful when it is tied to a person who is gone.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும் மாலைப்பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும் படையாகவும் வருகின்றது.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : முன்பு இனிதாய் ஒலித்த ஆயனின் புல்லாங்குழல் இப்போது நெருப்பாய்ச் சுடும் மாலைப் பொழுதிற்கு் தூதானது மட்டும் அன்றி, என்னைக் கொல்லும் ஆயுதமுமாகிவிட்டது.
Kalaignar
கலைஞர் : காதலர் பிரிவால் என்னைத் தணலாகச் சுடுகின்ற மாலைப்பொழுதை அறிவிக்கும் தூதாக வருவது போல வரும் ஆயனின் புல்லாங்குழலோசை என்னைக் கொல்லும் படைக்கருவியின் ஓசைபோல் அல்லவா காதில் ஒலிக்கிறது