Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

பொழுதுகண்டு இரங்கல்

Lamentations at Eventide

காமத்துப்பால் · LoveKural 1229 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1229

Tamil original

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு

மாலை படர்தரும் போழ்து.

Read the sounds · Transliteration

Padhimaruntu Paidhal Uzhakkum Madhimaruntu
Maalai Patardharum Pozhdhu

Understand the idea · English meaning

When night comes on confusing (everyone’s) mind, the (whole) town will lose its sense and be plunged in sorrow.

Connect it to life today · Modern meaning

When evening clouds her mind, it seems as if the whole town has become confused and is suffering with her. Strong loneliness can color the streets, sounds, and faces around you with the same sadness you feel inside.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : இதற்கு முன்பு நான் மட்டும்தான் மயங்கித் துன்புற்றேன்; இனிப் பார்த்தவர் எல்லாம் மதி மயங்கும்படி மாலைப் பொழுது வரும்போது இந்த ஊரே மயங்கித் துன்பப்படும்.

Kalaignar

கலைஞர் : என் அறிவை மயக்கும் மாலைப் பொழுது, இந்த ஊரையே மயக்கித் துன்பத்தில் ஆழ்த்துவது போல் எனக்குத் தோன்றுகிறது