Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

உறுப்புநலன் அழிதல்

Wasting Away

காமத்துப்பால் · LoveKural 1231 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1231

Tamil original

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி

நறுமலர் நாணின கண்.

Read the sounds · Transliteration

Sirumai Namakkozhiyach Chetchendraar Ulli
Narumalar Naanina Kan

Understand the idea · English meaning

While we endure the unbearable sorrow, your eyes weep for him who is gone afar, and shun (the sight of) fragrant flowers

Connect it to life today · Modern meaning

Her eyes weep for the beloved who has gone far away, losing their brightness and turning away from beautiful flowers. Deep sorrow can make even ordinary pleasures feel impossible to notice.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : இத்துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை நினைந்து அழுதமையால் கண்கள் அழகு இழந்து நறுமலர்களுக்கு நாணி விட்டன.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பிரிவைப் பொறுக்காத சிறுமை என்னோடு இருக்கப் பிரிவைப் பொறுத்துக் கொண்டு தொலைவில் சென்று அவரை எண்ணி அழுவதால், கண்கள் ஒளி இழந்துவிட்டன. முன்பு கண்களைக் கண்டு வெட்கப்பட்ட மண மலர்களுக்கு இப்போது கண்கள் வெட்கப்பட்டுவிட்டன.

Kalaignar

கலைஞர் : பிரிவுத் துன்பத்தை நமக்களித்துவிட்டு நெடுந்தொலைவு சென்று விட்டாரேயென்று வருந்திடும் காதலியின் கண்கள் அழகிழந்துபோய், மலர்களுக்கு முன்னால் நாணிக் கிடக்கின்றன