Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

நெஞ்சோடு கிளத்தல்

Soliloquy

காமத்துப்பால் · LoveKural 1245 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1245

Tamil original

செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்

உற்றால் உறாஅ தவர்.

Read the sounds · Transliteration

Setraar Enakkai Vitalunto Nenjeyaam
Utraal Uraaa Thavar

Understand the idea · English meaning

O my soul! can he who loves not though he is beloved, be forsaken saying he hates me (now)?

Connect it to life today · Modern meaning

She asks whether she can give up loving a person simply because he does not return her love. Caring does not vanish on command, even when a relationship has become one-sided.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நெஞ்சே! யாம் விரும்பி நாடினாலும் எம்மை நாடாத அவர் நம்மை வெறுத்து விட்டார் என்று எண்ணிக் கைவிட முடியும‌ோ?

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நெஞ்சே! நான் அவர்மீது அன்பு காட்டியும், என்மீது அன்பு காட்டாத அவரை, நம்மை வெறுத்தவர் என்று எண்ணிக் கைவிடும் உள்ள உறுதி எனக்கு உண்டோ?

Kalaignar

கலைஞர் : நெஞ்சே! நாம் விரும்பினாலும் நம்மை விரும்பி வராத அவர், நம்மை வெறுத்து விட்டார் என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா?