Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

நெஞ்சோடு கிளத்தல்

Soliloquy

காமத்துப்பால் · LoveKural 1244 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1244

Tamil original

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்

தின்னும் அவர்க்காணல் உற்று.

Read the sounds · Transliteration

Kannum Kolachcheri Nenje Ivaiyennaith
Thinnum Avarkkaanal Utru

Understand the idea · English meaning

O my soul! take my eyes also with you, ( if not), these would eat me up (in their desire) to see him.

Connect it to life today · Modern meaning

She begs her heart to take her eyes along when it goes to the beloved, because they ache to see him so fiercely. When the mind longs to visit someone, even the eyes seem restless for the sight.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நெஞ்சே! நீ அவரிடம் செல்லும்போது என் கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; அவரைக் காணவேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நெஞ்சே! நீ அவரைக் காணச் சென்றால் என் கண்களையும் உடன் கொண்டு செல். அவற்றை விட்டுவிட்டு நீ போய் விடுவாயானால் அவரைக் காண விரும்பும் என் கண்கள் என்னைத் தின்பன போல வருந்தும்.

Kalaignar

கலைஞர் : நெஞ்சே! நீ காதலரிடம் செல்லும் போது கண்களையும்கூட அழைத்துக்கொண்டு போ; இல்லையேல் அவரைக் காண வேண்டுமென்று என்னையே அவை தின்று விடுவது போல் இருக்கின்றன