Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

நிறையழிதல்

Reserve Overcome

காமத்துப்பால் · LoveKural 1256 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1256

Tamil original

செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ

எற்றென்னை உற்ற துயர்.

Read the sounds · Transliteration

Setravar Pinseral Venti Aliththaro
Etrennai Utra Thuyar

Understand the idea · English meaning

The sorrow I have endured by desiring to go after my absent lover, in what way is it excellent?

Connect it to life today · Modern meaning

Love-sickness can make someone chase the very person who caused the pain. After being left, a person may still feel driven to send one more message.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : வெறுத்து நீங்கிய காதலரின் பின் செல்ல விரும்பிய நிலையில் இருப்பதால் என்னை அடைந்த இந்த காமநோய் எத்தன்மையானது? அந்‌தோ!

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : என்னைப் பிரிந்து சென்றவர் பின்னே நான் போய்ச் சேர வேண்டும் என்று என்னைப் பிடித்த இந்தக் காதல் நோய் தூண்டுவதால் இது மிகமிகக் கொடியது.

Kalaignar

கலைஞர் : வெறுத்துப் பிரிந்ததையும் பொறுத்துக் கொண்டு அவர் பின்னே செல்லும் நிலையை என் நெஞ்சுக்கு ஏற்படுத்திய காதல் நோயின் தன்மைதான் என்னே