Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

அவர்வயின் விதும்பல்

Mutual Desire

காமத்துப்பால் · LoveKural 1267 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1267

Tamil original

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்

கண்அன்ன கேளிர் விரன்.

Read the sounds · Transliteration

Pulappenkol Pulluven Kollo Kalappenkol
Kananna Kelir Viran

Understand the idea · English meaning

On the return of him who is as dear as my eyes, am I displeased or am I to embrace (him); or am I to do both?

Connect it to life today · Modern meaning

When a beloved returns, we may not know whether to complain, embrace, or do both. Someone may begin a reunion with an annoyed remark and end it by holding the person close.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : என்னுடைய கண்போன்ற காதலர் வருவாரானால், யான் அவரோடு ஊடுவேனோ? அல்லது அவரைத் தழுவுவேனோ? அவரோடு கூடுவேனோ?

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : கண்போல் சிறந்த என் துணைவர் வந்தால் அவர் நெடுநாள் பிரிந்திருந்ததற்காக ஊடுவேனா? அவர் பிரிவைத் தாங்க முடியாமல் அவரைத் தழுவுவேனா? அல்லது இரண்டு செயல்களையும் கலந்து செய்வேனா?

Kalaignar

கலைஞர் : கண்ணின் மணியாம் என் காதலர் வந்தவுடன், பிரிந்திருந்த துயரின் காரணமாக அவருடன் ஊடல், கொள்வேனோ? அல்லது கட்டித் தழுவிக் கொள்வேனோ? அல்லது ஊடுதல் கூடுதல் ஆகிய இரண்டையும் இணைத்துச் செய்வேனோ? ஒன்றுமே புரியவில்லையே எனக்கு; அந்த இன்பத்தை நினைக்கும்போது