Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

புணர்ச்சி விதும்பல்

Desire for Reunion

காமத்துப்பால் · LoveKural 1281 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1281

Tamil original

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்

கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

Read the sounds · Transliteration

Ullak Kaliththalum Kaana Makizhdhalum
Kallukkil Kaamaththir Kuntu

Understand the idea · English meaning

To please by thought and cheer by sight is peculiar, not to liquor but lust.

Connect it to life today · Modern meaning

Love brings joy just by being remembered or seen; it does not need anything to be consumed first. A message from someone special can brighten a person's mood before they even meet.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகை தன்மையும் கள்ளுக்கு இல்‌லை; காமத்திற்கு உண்டு

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நினைத்த அளவிலே உணர்வு அழியாமல் உள்ளம் கிளர்தலும், பார்த்த அளவிலே உணர்வு அழிய உள்ளம் கிளர்தலும் கள் உண்பவர்க்கு இல்லை; காதல் வசப்பட்டவர்க்கே உண்டு.

Kalaignar

கலைஞர் : மதுவை அருந்தினால்தான் இன்பம், ஆனால் காதல் அப்படியல்ல; நினைத்தாலே இன்பம்; காதலர்கள் ஒருவரையொருவர் கண்டாலே இன்பம்