Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

புலவி

Pouting

காமத்துப்பால் · LoveKural 1302 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1302

Tamil original

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது

மிக்கற்றால் நீள விடல்.

Read the sounds · Transliteration

Uppamain Thatraal Pulavi Adhusiridhu
Mikkatraal Neela Vital

Understand the idea · English meaning

A little dislike is like salt in proportion; to prolong it a little is like salt a little too much.

Connect it to life today · Modern meaning

A brief disagreement can add feeling to love, but dragging it out can sour the relationship. If a couple lets a small argument last all day, even affection can start to feel bitter.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை அளவு கடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : உணவின் அளவிற்கு ஏற்ப உப்பின் அளவு அமைவதை போல், கலவி இன்பத்திற்கு வேண்டும் அளவிற்கு ஏற்ப ஊடல் அமையட்டும்; அதை அளவு கடந்து கொஞ்சம் நீட்டினாலும், உப்பின் அளவைக் கூட்டுவது போல் ஆகும்.

Kalaignar

கலைஞர் : ஊடலுக்கும் கூடலுக்கும் இடையில் உள்ள காலம் உணவில் இடும் உப்பு போல் ஓரளவுடன் இருக்க வேண்டும் அந்தக் கால அளவு நீடித்தால் உணவில் உப்பு மிகுதியானதற்கு ஒப்பாக ஆகிவிடும்