Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

புலவி

Pouting

காமத்துப்பால் · LoveKural 1304 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1304

Tamil original

ஊடி யவரை உணராமை வாடிய

வள்ளி முதலரிந் தற்று.

Read the sounds · Transliteration

Ooti Yavarai Unaraamai Vaatiya
Valli Mudhalarin Thatru

Understand the idea · English meaning

Not to reconcile those who have feigned dislike is like cutting a faded creeper at its root.

Connect it to life today · Modern meaning

When someone already hurt reaches for peace, turning away can damage the bond even more. If a partner apologizes after an argument, refusing every attempt to reconnect may end the relationship.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தன்னுடன் ஊடல் கொண்ட மனைவிக்கு அவள் ஊடலைத் தெளிவுபடுத்தி, அவளுடன் கூடாமல் போவது, முன்பே நீர் இல்லாமல் வாடிய கொடியை அடியோடு அறுத்தது போலாம்.

Kalaignar

கலைஞர் : ஊடல் புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும்