Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

புலவி நுணுக்கம்

Feigned Anger

காமத்துப்பால் · LoveKural 1316 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1316

Tamil original

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்

புல்லாள் புலத்தக் கனள்.

Read the sounds · Transliteration

Ullinen Endrenmar Renmarandheer Endrennaip
Pullaal Pulaththak Kanal

Understand the idea · English meaning

When I said I had remembered her, she said I had forgotten her and relaxing her embrace, began to feign dislike.

Connect it to life today · Modern meaning

A lover may turn a loving statement into a playful accusation: 'You remembered me, so you must have forgotten me first.' When a partner says they were thinking of you, jealousy can make even affection sound like proof of neglect.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நினைத்தேன் என்று கூறி‌னேன்; நினைப்புக்கு முன் மறப்பு உண்டு அன்றோ? ஏன் மறந்தீர் என்று என்னைத் தழுவாமல் ஊடினாள்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : எப்போதும் உன்னைத்தான் எண்ணினேன் என்றேன். சில சமயம் மறந்து ஒரு சமயம் நினைத்ததாக எண்ணி அப்படியானால் என்னை இடையில் மறந்திருக்கிறீர் என்று சொல்லித் தழுவத் தொடங்கியவள், விட்டுவிட்டு ஊடத் தொடங்கினாள்.

Kalaignar

கலைஞர் : ``உன்னை நினைத்தேன்'' என்று காதலியிடம் சொன்னதுதான் தாமதம்;'' அப்படியானால் நீர் என்னை மறந்திருந்தால்தானே நினைத்திருக்க முடியும்?'' எனக்கேட்டு ``ஏன் மறந்தீர்?'' என்று அவள் ஊடல் கொண்டாள்