புலவி நுணுக்கம்
Feigned Anger
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Immaip Pirappil Piriyalam Endrenaak
Kannirai Neerkon Tanal
Understand the idea · English meaning
When I said I would never part from her in this life her eyes were filled with tears.
Connect it to life today · Modern meaning
Even a promise of lifelong togetherness can awaken fear of a future separation. When told, 'We will never part in this life,' a deeply loving person may hear the possibility of losing that person beyond it.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : இப்பிறப்பில் யாம் பிரிய மாட்டோம் என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : காதல் மிகுதியில் இந்தப் பிறவியில் நான் உன்னைப் பிரியேன் என்று சொன்னேன்; அப்படி என்றால் அடுத்த பிறவியில் பிரியப்போவதாக எண்ணிக் கண் நிறைய நீரினைக் கொண்டாள்.
Kalaignar
கலைஞர் : ``இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம்'' என்று நான் சொன்னவுடன் ``அப்படியானால் மறு பிறப்பு என ஒன்று உண்டோ? அப்போது நம்மிடையே பிரிவு ஏற்படுமெனக் கூறுகிறாயா?'' எனக் கேட்டு கண்கலங்கினாள் காதலி