Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

புலவி நுணுக்கம்

Feigned Anger

காமத்துப்பால் · LoveKural 1318 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1318

Tamil original

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்

எம்மை மறைத்திரோ என்று.

Read the sounds · Transliteration

Thummuch Cheruppa Azhudhaal Numarullal
Emmai Maraiththiro Endru

Understand the idea · English meaning

When I suppressed my sneezing, she wept saying, “I suppose you (did so) to hide from me your own people’s remembrance of you”.

Connect it to life today · Modern meaning

Even hiding a sneeze to avoid jealousy can create more suspicion. If a partner tries to conceal a harmless reaction, the other may wonder whether something else is being kept from them.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அவளுடைய ஊடலுக்கு அஞ்சி யான் தும்மலை அடக்கிக் கொள்ள உம்மவர் உம்மை நினைப்பதை எமக்குத் தெரியாமல் மறைக்கின்றீரோ என்று அழுதாள்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : அடுத்தமுறை தும்மல் வர அதனை வெளிப்படுத்தாமல் நான் அடக்கினேன்; அதைப் பார்த்து யாரோ உமக்கு வேண்டியவர்கள் உம்மை நினைப்பதை நான் அறிந்துவிடக்கூடாது என்று எனக்கு மறைக்கிறீரோ, என்று ஊடி அழுதாள்.

Kalaignar

கலைஞர் : ஊடல் கொள்வாளோ எனப் பயந்து நான் தும்மலை அடக்கிக் கொள்வதைப் பார்த்த அவள் ``ஓ'' உமக்கு நெருங்கியவர் உம்மை நினைப்பதை நான் அறியாதபடி மறைக்கிறீரோ?'' எனக் கேட்டு அழுதாள்