Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

வெஃகாமை

Not Coveting

அறத்துப்பால் · VirtueKural 180 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 180

Tamil original

இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்

வேண்டாமை என்னுஞ் செருக்கு.

Read the sounds · Transliteration

Iraleenum Ennaadhu Veqkin Viraleenum
Ventaamai Ennunj Cherukku

Understand the idea · English meaning

To covet (the wealth of another) regardless of consequences will bring destruction. That greatness (of mind) which covets not will give victory.

Connect it to life today · Modern meaning

Wanting to take what belongs to someone else, without thinking through the consequences, tends to end in real loss; but genuinely not wanting it in the first place is its own kind of quiet victory. For example, choosing not to pursue an unfair advantage over a rival, even when you easily could, often leaves you with a cleaner kind of success in the end.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : வி‌ளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பின் வி‌ளைவை எண்ணாமல் அடுத்தவர் பொருளை விரும்பிக் கவர்ந்தால், அது நமக்கு அழிவைக் கொடுக்கும்; அதற்கு ஆசைப்படாத செல்வமோ வெற்றியைக் கொடுக்கும்‌.

Kalaignar

கலைஞர் : விளைவுகளைப் பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும்