புறங்கூறாமை
Not Backbiting
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Tamil original
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
Read the sounds · Transliteration
Edhilaar Kutrampol Thangutrang Kaankirpin
Theedhunto Mannum Uyirkku
Understand the idea · English meaning
If they observed their own faults as they observe the faults of others, would any evil happen to men ?
Connect it to life today · Modern meaning
If people scrutinized their own mistakes with the same sharp attention they give to other people's mistakes, there would be a lot less unnecessary conflict and hurt in the world. Self-awareness tends to soften judgment of others. For example, someone quick to criticize a friend's mistake might reconsider if they took a moment to remember their own recent slip-up.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டோ?
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : புறம்பேச அடுத்தவர் குற்றத்தைப் பார்ப்பவர், பேசும் தம் குற்றத்தையும் எண்ணினால், நிலைத்து இருக்கும் உயிர்க்குத் துன்பமும் வருமோ?
Kalaignar
கலைஞர் : பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும்