Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

ஈகை

Giving

அறத்துப்பால் · VirtueKural 228 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 228

Tamil original

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை

வைத்திழக்கும் வன்க ணவர்.

Read the sounds · Transliteration

Eeththuvakkum Inpam Ariyaarkol Thaamutaimai
Vaiththizhakkum Vanka Navar

Understand the idea · English meaning

Do the hard-eyed who lay up and lose their possessions not know the happiness which springs from the pleasure of giving ?

Connect it to life today · Modern meaning

People who hoard everything only to eventually lose it anyway seem to have no idea what they're missing out on, the genuine joy that comes from giving. Holding on too tightly can cost more than it saves. For example, someone who never shares and later loses everything to bad luck realizes too late that the joy of generosity was there for the taking all along.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் வன் கண்மை உடையவர், பிறர்க்கு கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : இல்லாதவர்க்குக் கொடுப்பதால் கொடுப்பவரும் பெறுபவரும் முகத்தாலும் மனத்தாலும் மகிழ்ச்சி அடைவர். பிறர்க்குக் கொடுக்காமல் பொருளைச் சேமித்து வைத்துப் பிறகு அதை இழந்துவிடும் கொடியவர்கள் அம்மகிழ்சியை அறியார்களோ?

Kalaignar

கலைஞர் : ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈ.ட்டிய பொருள் அனைத்தையும் இழந்திடும் ஈ.வு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கி மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ?