Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

புலால் மறுத்தல்

Abstinence from Flesh

அறத்துப்பால் · VirtueKural 259 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 259

Tamil original

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத் துண்ணாமை நன்று.

Read the sounds · Transliteration

Avisorin Thaayiram Vettalin Ondran
Uyirsekuth Thunnaamai Nandru

Understand the idea · English meaning

Not to kill and eat (the flesh of) an animal, is better than the pouring forth of ghee etc., in a thousand sacrifices.

Connect it to life today · Modern meaning

Choosing not to kill and eat a creature is better than performing countless impressive rituals. Compassion in daily life matters more than grand displays of piety. For example, quietly sparing an animal shows more mercy than making a public show of devotion while causing harm.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : (மந்திரம் சொல்லித் தேவர்களுக்கு இடும் உணவாகிய) அவிகளைத் தீயில் போட்டு ஆயிரம் வேள்வி செய்வதைக் காட்டிலும் ஓர் உயிரைப் போக்கி அதன் உடம்பை உண்ணாமல் இருப்பது நல்லது.

Kalaignar

கலைஞர் : நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது