The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Ellaa Vilakkum Vilakkalla Saandrorkkup
Poiyaa Vilakke Vilakku
Understand the idea · English meaning
All lamps of nature are not lamps; the lamp of truth is the lamp of the wise.
Connect it to life today · Modern meaning
Lights can remove darkness around us, but truth is the light that guides a wise person within. Honesty helps us see our choices clearly. For example, a student who admits cheating can finally face the problem and choose to rebuild trust.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : (புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : உலகத்து இருட்டைப் போக்கும் விளக்குகள், விளக்கு ஆகா; பொய் சொல்லாமை என்னும் விளக்கே சான்றோர்க்கு விளக்கு ஆகும்.
Kalaignar
கலைஞர் : புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும்