Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

வெகுளாமை

Restraining Anger

அறத்துப்பால் · VirtueKural 301 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 301

Tamil original

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்

காக்கின்என் காவாக்கால் என்?

Read the sounds · Transliteration

Sellitaththuk Kaappaan Sinangaappaan Allitaththuk
Kaakkinen Kaavaakkaal En?

Understand the idea · English meaning

He restrains his anger who restrains it when it can injure; when it cannot injure, what does it matter whether he restrain it, or not ?

Connect it to life today · Modern meaning

The real test of self-control is staying calm when you have the power to hurt someone back. Anger that cannot do much damage is easy to hide; anger that can cause harm must be mastered. For example, after a rude message in a group chat, choosing a calm reply shows true strength.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன?

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : எங்கே தன் கோபம் பலிக்குமோ அங்கே கோபம் கொள்ளாதவனே உண்மையாகவே கோபம் கொள்ளாதவன்; பலிக்காத இடத்தில் கோபத்தைத் தடுத்து என்ன? தடுக்காமல் விட்டுத்தான் என்ன?

Kalaignar

கலைஞர் : தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?