Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

இன்னா செய்யாமை

Not doing Evil

அறத்துப்பால் · VirtueKural 313 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 313

Tamil original

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்

உய்யா விழுமந் தரும்.

Read the sounds · Transliteration

Seyyaamal Setraarkkum Innaadha Seydhapin
Uyyaa Vizhuman Tharum

Understand the idea · English meaning

In an ascetic inflict suffering even on those who hate him, when he has not done them any evil, it will afterwards give him irretrievable sorrow.

Connect it to life today · Modern meaning

Hurting someone who wronged you without cause brings lasting sorrow instead of relief. Revenge adds a new wrong to the original one and can trap you in regret. For example, posting private information about a bully may feel satisfying at first, but it can create consequences you cannot undo.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானாவற்றைச் செய்தால் செய்தபிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நாம் ஒரு தீமையும் செய்யாதிருக்க, கோபம் கொண்டு நமக்குத் தீமை செய்தவர்க்கு, நாம் தீமை செய்தால், தப்பிக்க முடியாத அளவு துன்பத்தை அது நமக்குத் தரும்.

Kalaignar

கலைஞர் : யாருக்கும் கேடு செய்யாமல் இருப்பவருக்குப் பகைவர் கேடு செய்துவிட்டால் அதற்குப் பதிலாக அவருக்கு வரும் கேடு மீளாத் துன்பம் தரக் கூடியதாகும்