Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

துறவு

Renunciation

அறத்துப்பால் · VirtueKural 341 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 341

Tamil original

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்.

Read the sounds · Transliteration

Yaadhanin Yaadhanin Neengiyaan Nodhal
Adhanin Adhanin Ilan

Understand the idea · English meaning

Whatever thing, a man has renounced, by that thing; he cannot suffer pain.

Connect it to life today · Modern meaning

Whatever attachment a person gives up, that particular attachment can no longer cause the same pain. Letting go removes the grip of the thing we were clinging to. For example, releasing the need for everyone's approval makes criticism much easier to bear.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான்.

Kalaignar

கலைஞர் : ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை அணுகுவதில்லை