Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

இறைமாட்சி

The Greatness of a King

பொருட்பால் · WealthKural 383 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 383

Tamil original

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்

நீங்கா நிலனான் பவர்க்கு.

Read the sounds · Transliteration

Thoongaamai Kalvi Thunivutaimai Immoondrum
Neengaa Nilanaan Pavarkku

Understand the idea · English meaning

These three things, viz., vigilance, learning, and bravery, should never be wanting in the ruler of a country.

Connect it to life today · Modern meaning

Anyone responsible for a country or community should stay alert, keep learning, and act with courage. For example, a manager who notices problems early, studies the facts, and makes a fair decision can protect the whole team.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : செயல் ஆற்றுவதில் சோர்வு இல்லாமை, அனைத்தையும் அறியும் கல்வி, தீயவை எதிர்த்தாலும் நல்லன செய்வதற்கு ஏற்ற துணிவு இம்மூன்றும் நாட்டை ஆளுவோரை விட்டு விலகக்கூடாது.

Kalaignar

கலைஞர் : காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும்