Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

இறைமாட்சி

The Greatness of a King

பொருட்பால் · WealthKural 390 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 390

Tamil original

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்

உடையானாம் வேந்தர்க் கொளி.

Read the sounds · Transliteration

Kotaiyali Sengol Kutiyompal Naankum
Utaiyaanaam Vendhark Koli

Understand the idea · English meaning

He is the light of kings who has there four things, beneficence, benevolence, rectitude, and care for his people.

Connect it to life today · Modern meaning

A ruler shines when they combine generosity, compassion, justice, and care for the people. For example, a community leader can support families in need, treat opponents fairly, enforce clear rules, and protect the vulnerable.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிமக்களைக்காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடுப்பது, எதிர் கட்சியினரிடமும் இனிதாய்ப்போசுவது, நீதி விளங்கும் ஆட்சி செய்வது, மக்களைப் பாதுகாப்பது இவை நான்கையும் உடையதே அரசுகளுக்கு விளக்குப் போன்றது.

Kalaignar

கலைஞர் : நலவாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும், நிலையுணர்ந்து கருணை காட்டியும், நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும், மக்களைப் பேணிக் காப்பதே ஓர் அரசுக்குப் புகழொளி சேர்ப்பதாகும்