Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

கல்லாமை

Ignorance

பொருட்பால் · WealthKural 407 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 407

Tamil original

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்

மண்மாண் புனைபாவை யற்று.

Read the sounds · Transliteration

Nunmaan Nuzhaipulam Illaan Ezhilnalam
Manmaan Punaipaavai Yatru

Understand the idea · English meaning

The beauty and goodness of one who is destitute of knowledge by the study of great and exquisite works, is like (the beauty and goodness) of a painted earthen doll.

Connect it to life today · Modern meaning

Good looks or a polished image mean little without the understanding to support them, like a beautifully painted clay figure. For example, an impressive presentation is empty if its speaker cannot explain the basic facts behind it.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராய வல்லவான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு மண்ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நுண்ணிய, சிறந்த பல நூல்களிலும் நுழைந்த அறிவு இல்லாதவனின் உடல் வளர்ச்சியும் அழகும், மண்ணால் சிறப்பாகச் செய்யப்பட்ட பொம்மையின் அழகு போன்றதாகும்.

Kalaignar

கலைஞர் : அழகான தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண் பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள்