அறிவுடைமை
The Possession of Knowledge
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Tamil original
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
Read the sounds · Transliteration
Epporul Yaaryaarvaaik Ketpinum Apporul
Meypporul Kaanpa Tharivu
Understand the idea · English meaning
To discern the truth in every thing, by whomsoever spoken, is wisdom.
Connect it to life today · Modern meaning
Wisdom looks for truth in an idea no matter who says it, instead of trusting popularity or status. For example, you check the evidence before forwarding a rumour shared by a close friend.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு.
Kalaignar
கலைஞர் : எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்