Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

அறிவுடைமை

The Possession of Knowledge

பொருட்பால் · WealthKural 422 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 422

Tamil original

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ

நன்றின்பால் உய்ப்ப தறிவு.

Read the sounds · Transliteration

Sendra Itaththaal Selavitaa Theedhoreei
Nandrinpaal Uyppa Tharivu

Understand the idea · English meaning

Not to permit the mind to go where it lists, to keep it from evil, and to employ it in good, this is wisdom.

Connect it to life today · Modern meaning

Wisdom does not let the mind follow every impulse; it turns attention away from harm and toward what is good. For example, pausing before sending an angry message can keep a disagreement from becoming a lasting wound.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : மனம் சென்ற வழியெல்லாம் அதைச் செல்ல விடாமல், தீமையை விட்டு விலக்கி, நல்ல வழியில் நடத்துவது அறிவு.

Kalaignar

கலைஞர் : மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்