Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

சிற்றினம் சேராமை

Avoiding mean Associations

பொருட்பால் · WealthKural 451 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 451

Tamil original

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்

சுற்றமாச் சூழ்ந்து விடும்.

Read the sounds · Transliteration

Sitrinam Anjum Perumai Sirumaidhaan
Sutramaach Choozhndhu Vitum

Understand the idea · English meaning

(True) greatness fears the society of the base; it is only the low - minded who will regard them as friends.

Connect it to life today · Modern meaning

The people around you can reveal and shape your character. For example, choosing honest friends makes it easier to resist cheating and harmful habits.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தீய குணத்தாரோடு சேரப் பெரியோர் அஞ்சுவர்; சிறியாரோ அவர்களைத் தம் உறவாகவே கருதி விடுவர்.

Kalaignar

கலைஞர் : பெரியோர், கீழ்மக்களின் கூட்டத்தோடு சேர மாட்டார்கள் ஆனால் சிறியோர்களோ இனம் இனத்தோடு சேருமென்பதுபோல் அந்தக் கீழ் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்வார்கள்