Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

சிற்றினம் சேராமை

Avoiding mean Associations

பொருட்பால் · WealthKural 454 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 454

Tamil original

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு

இனத்துள தாகும் அறிவு.

Read the sounds · Transliteration

Manaththu Ladhupolak Kaatti Oruvarku
Inaththula Thaakum Arivu

Understand the idea · English meaning

Wisdom appears to rest in the mind, but it really exists to a man in his companions.

Connect it to life today · Modern meaning

Wisdom may seem to come from within, but good companions help it grow and become useful. For example, a mentor can help you notice a better answer than you would find alone.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : அறிவு ஒருவன் மனத்துள் இருப்பது போலத் தோன்றும்; உண்மையில் அது அவன் சேர்ந்துள்ள இனத்தின்பால் இருந்து பெறப்படுவதே ஆகும்.

Kalaignar

கலைஞர் : ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்