Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

தெரிந்து வினையாடல்

Selection and Employment

பொருட்பால் · WealthKural 519 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 519

Tamil original

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக

நினைப்பானை நீங்கும் திரு.

Read the sounds · Transliteration

Vinaikkan Vinaiyutaiyaan Kenmaive Raaka
Ninaippaanai Neengum Thiru

Understand the idea · English meaning

Prosperity will leave (the king) who doubts the friendship of the man who steadily labours in the discharge of his duties.

Connect it to life today · Modern meaning

Do not treat a hardworking person’s loyalty as suspicious without good reason; mistrust can drive away success. For example, a manager who listens to rumors about a reliable employee may lose the very person keeping the project on track.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : மேற்க்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தன் பதவியில் செயல்திறம் உடையவன் நிர்வாகத்திற்கு வேண்டியவனாக இருக்க, அவனை ஒழிக்க எண்ணிக் கோள் மூட்டுவார் சொல்லை நிர்வாகம் கேட்குமானால் அந்த நிர்வாகத்தை விட்டுச் செல்வத் திருமகள் நீக்குவான்.

Kalaignar

கலைஞர் : எடுத்த காரியத்தை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவரின் உறவைத் தவறாக எண்ணுபவரை விட்டுப் பெருமை அகன்று விடும்