Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

பொச்சாவாமை

Unforgetfulness

பொருட்பால் · WealthKural 535 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 535

Tamil original

முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை

பின்னூறு இரங்கி விடும்.

Read the sounds · Transliteration

Munnurak Kaavaadhu Izhukkiyaan Thanpizhai
Pinnooru Irangi Vitum

Understand the idea · English meaning

The thoughtless man, who provides not against the calamities that may happen, will afterwards repent for his fault.

Connect it to life today · Modern meaning

If you fail to prepare for trouble, you may only regret that mistake after the damage is done. For example, someone who never backs up important files may mourn the loss after a device breaks.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : வரும் இடையூறுகளை முன்னே அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : துன்பங்கள் வரும் முன்பே அவற்றைத் தடுக்காமல் மறந்திருந்தவன், பின் அவை வந்தபோது தடுக்க முடியாமல் தன் பிழையை எண்ணி வருந்துவான்.

Kalaignar

கலைஞர் : முன்கூட்டியே சிந்தித்துத் தன்னைக் காத்துக் கொள்ளத் தவறியவன், துன்பம் வந்தபிறகு தன் பிழையை எண்ணிக் கவலைப்பட நேரிடும்