Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

வெருவந்த செய்யாமை

Absence of Terrorism

பொருட்பால் · WealthKural 562 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 562

Tamil original

கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்

நீங்காமை வேண்டு பவர்.

Read the sounds · Transliteration

Katidhochchi Mella Erika Netidhaakkam
Neengaamai Ventu Pavar

Understand the idea · English meaning

Let the king, who desires that his prosperity may long remain, commence his preliminary enquires with strictness, and then punish with mildness.

Connect it to life today · Modern meaning

Strong leadership can begin an investigation firmly but should not punish more harshly than the facts require. A coach may take a safety violation seriously, then choose a measured consequence that helps a player improve.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஆக்கம் நெடுங்காலம் நீங்காமலிருக்க விரும்புகின்றவர் (தண்டிக்கத் தொடங்கும் போது) அளவு கடந்து செய்வது போல் காட்டி அளவு மீறாமல் முறை செய்ய வேண்டும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நெடுங்காலம் ஆட்சி செய்ய விரும்புபவர் தண்டிக்கும்போது கடுமையாகத் தண்டிப்பவர்போல தொடங்கி வரம்பு கடவாமல் செய்க.

Kalaignar

கலைஞர் : குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித், தண்டிக்கும் போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும்