Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

வெருவந்த செய்யாமை

Absence of Terrorism

பொருட்பால் · WealthKural 564 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 564

Tamil original

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்

உறைகடுகி ஒல்லைக் கெடும்.

Read the sounds · Transliteration

Iraikatiyan Endruraikkum Innaachchol Vendhan
Uraikatuki Ollaik Ketum

Understand the idea · English meaning

The king who is spoken of as cruel will quickly perish; his life becoming shortened.

Connect it to life today · Modern meaning

When people regularly describe their ruler as cruel, that ruler's power and honor will not last. An online community led by someone known for harshness will quickly lose members and respect.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நம் அரசன் கடுமையானவன் என்று குடிகளால் கூறப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசன், தன் ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நம்மை ஆளுவோர் மிகவும் கொடியவர் என்று குடிமக்களால் சொல்லப்படும் கொடுஞ் சொல்லைப் பெற்ற ஆட்சி அதன் ஆட்சிக் காலம் குறைந்து விரைவி்ல் அழியும்.

Kalaignar

கலைஞர் : கடுஞ்சொல் உரைக்கும் கொடுங்கோல் என்று குடிமக்களால் கருதப்படும் அரசு, தனது பெருமையை விரைவில் இழக்கும்