Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

வெருவந்த செய்யாமை

Absence of Terrorism

பொருட்பால் · WealthKural 569 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 569

Tamil original

செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்

வெருவந்து வெய்து கெடும்.

Read the sounds · Transliteration

Seruvandha Pozhdhir Siraiseyyaa Vendhan
Veruvandhu Veydhu Ketum

Understand the idea · English meaning

The king who has not provided himself with a place of defence, will in times of war be seized with fear and quickly perish.

Connect it to life today · Modern meaning

A ruler who makes no preparation before danger arrives will panic and fall when the crisis comes. A family that waits until a storm to discover it has no emergency supplies is learning the same lesson.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : முன்னமே தக்கவாறு அரண் செய்து கொள்ளாத அரசன் போர் வந்த காலத்தில் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நெருக்கடி வருவதற்கு முன்பே தான் தப்பித்துக் கொள்ளப் பாதுகாப்புச் செய்துகொள்ளாத ஆட்சி, நெருக்கடி வந்தபோது பாதுகாப்பு இல்லாததால் அஞ்சி, விரைவில் அழியும்.

Kalaignar

கலைஞர் : முன்கூட்டியே உரிய பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் வேந்தன், போர் வந்துவிட்டால் அதற்கு அஞ்சி விரைவில் வீழ நேரிடும்