Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

ஊக்கம் உடைமை

Energy

பொருட்பால் · WealthKural 591 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 591

Tamil original

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃ தில்லார்

உடையது உடையரோ மற்று.

Read the sounds · Transliteration

Utaiyar Enappatuvadhu Ookkam Aqdhillaar
Utaiyadhu Utaiyaro Matru

Understand the idea · English meaning

Energy makes out the man of property; as for those who are destitute of it, do they (really) possess what they possess ?

Connect it to life today · Modern meaning

A person's drive is a deeper form of wealth than possessions; without it, other advantages may go unused. A student with little equipment but steady effort can accomplish more than someone with every resource and no motivation.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஊக்கம் உடையவரே எல்லாவற்றையும் உடையவர்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதை உடையவர் என்றாலும் உடையவர் ஆவாரே?

Kalaignar

கலைஞர் : ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர் ஊமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்