Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

சொல்வன்மை

Power of Speech

பொருட்பால் · WealthKural 650 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 650

Tamil original

இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது

உணர விரித்துரையா தார்.

Read the sounds · Transliteration

Inaruzhththum Naaraa Malaranaiyar Katradhu
Unara Viriththuraiyaa Thaar

Understand the idea · English meaning

Those who are unable to set forth their acquirements (before others) are like flowers blossoming in a cluster and yet without fragrance.

Connect it to life today · Modern meaning

People who cannot explain what they have learned so that others understand are like flowers that bloom without fragrance. For example, knowing a lesson is not enough if you cannot teach its main point clearly to a classmate.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தாம் கற்ற நூற்ப் பொருளைப் பிறர் உணருமாறு விரிந்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தான் கற்றதைப் பிறர் மனங்கொள்ள விளக்கிச்சொல்லும் ஆற்றல் அற்றவர், கொத்தாக மலர்ந்தும் மணக்காத மலர் போன்றவர்.

Kalaignar

கலைஞர் : கற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்