Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

வினைசெயல்வகை

Modes of Action

பொருட்பால் · WealthKural 675 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 675

Tamil original

பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்

இருள்தீர எண்ணிச் செயல்.

Read the sounds · Transliteration

Porulkaruvi Kaalam Vinaiyitanotu Aindhum
Iruldheera Ennich Cheyal

Understand the idea · English meaning

Before acting resolve all doubts through consideration of these five: Cost, means, time, place and the action itself.

Connect it to life today · Modern meaning

Before acting, consider the resources, tools, timing, method, and place the work requires. Before starting a community event, check the budget, equipment, date, plan, and venue.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : வேண்டிய பொருள், ஏற்றக்கருவி, தக்க காலம், மேற்கொண்ட தொழில், உரிய இடம் ஆகிய ஐந்தினையும் மயக்கம் தீர எண்ணிச் செய்ய வேண்டும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஒரு செயலைச் செய்யத் தொடங்கும்போது தனக்கும் தன் எதிரிக்கும் இருக்கும் செல்வம், சாதனங்கள், ஏற்ற காலம், செயல்திறம், பொருத்தமான இடம் ஆகிய ஐந்தையும் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் சிந்தித்துச் செய்க.

Kalaignar

கலைஞர் : ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு, அதற்குத் தேவையான பொருள், ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப் போகும் செயல்முறை, உகந்த இடம் ஆகிய ஐந்தையும் குறையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்