Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

பொருள் செயல் வகை

Way of Accumulating Wealth

பொருட்பால் · WealthKural 758 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 758

Tamil original

குன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன்று

உண்டாகச் செய்வான் வினை.

Read the sounds · Transliteration

Kundreri Yaanaip Por Kantatraal
Thankaiththondru Untaakach Cheyvaan Vinai

Understand the idea · English meaning

An undertaking of one who has wealth in one’s hands is like viewing an elephant-fight from a hill-top.

Connect it to life today · Modern meaning

Starting a task with resources already in hand is like watching a difficult contest from a safe hill: it gives confidence and control. Preparation makes hard work less dangerous. For example, a student with savings and a clear plan can begin a course without being overwhelmed by every expense.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு ஒருவன் செயல் செய்தால், மலையின் மேல் ஏறி யானைப் போரைக் கண்டாற் போன்றது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தன் கையிலே பணம் இருக்க ஒரு செயலைச் செய்யத் தொடங்குவது, ஒருவன் மலை மேல் ஏறி நின்று யானைச் சண்டையைக் கண்டது போலாம்.

Kalaignar

கலைஞர் : தன் கைப்பொருளைக்கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது யானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்கிக் கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப் போன்று இலகுவானது